×

தைப்பூசத்தை முன்னிட்டு ஊத்துக்கோட்டை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத பாபஹரேஸ்வரர் கோயிலில் 108 பால்குடம் ஏந்தி முருகப்பெருமானை வழிபட்ட பெண்கள்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தைப்பூசத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத பாபஹரேஸ்வரர் திருக்கோயிலில் 108 பெண்கள் பால்குடம் ஏந்தி முருகப்பெருமானை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த வட தில்லை கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத பாபஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று 108 பெண்கள் பால்குடம் வழிபாடு நடைபெறுவது வழக்கம் அதன்படி இன்று தைப்பூச தினத்தை முன்னிட்டு அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து 108 பெண்கள் தலையில் பால்குடம் ஏந்தியும், ஆண்கள் காவடி எடுத்து ஆடியும் ஊர்வலமாக சென்று வடதில்லையில் அமைந்துள்ள ஸ்ரீ பழனி முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

முன்னதாக அதிகாலை முதல் பழனி ஆண்டவருக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post தைப்பூசத்தை முன்னிட்டு ஊத்துக்கோட்டை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத பாபஹரேஸ்வரர் கோயிலில் 108 பால்குடம் ஏந்தி முருகப்பெருமானை வழிபட்ட பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Murukapperuman ,Shri ,Maragathambigai Sameda Babahareswarar ,Temple ,Thaipuṣṇa ,Pothukottai ,Balkudum ,Arulmigu ,Sri Maragathambigai Sameda Babahareswarar ,Thaipuzata ,Oathukota ,North Dilla ,Thiruvallur district Othukkot ,Taipu ,
× RELATED தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில்...